• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உயர் கல்வி ஒத்துழைப்பு சார்பிலும் சீன மொழிக்கான மத்திய நிலையமொன்றைத் தாபிப்பது சார்பிலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளல்
- சர்வதேச ஒத்துழைப்பு, கல்விமான்களின் ஒத்துழைப்பு, கலாசார செயற்பாடுகள் மற்றும் நட்புறவினை மேம்படுத்துதல் என்பனவற்றை நோக்காகக்கொண்டு உயர் கல்வி ஒத்துழைப்பிற்காக சீனாவின் ஷங்காய் திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலுள்ள ஒத்துழைப்பு துறைகளின் கீழ் சீன மொழிக்கான மத்திய நிலையமொன்றை இந் நாட்டில் தாபிப்பதற்குரியதாக இலங்​கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் ஷங்காய் திறந்த பல்கலைக்கழகத்திற்கும் Bank of China Ltd. நிறுவனத்திற்கும் இடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்றைச் கைச்சாதிடுவதற்கும் உரிய தரப்பினர்களினால் உடன்பாடு காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க 05 வருட காலத்திற்கு அமுலிலிருக்கும் விதத்தில் உரிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.