• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடற்றொழிலின் மேம்பாட்டிற்காக யப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடை
- இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடற்றொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு கடல் உற்பத்திகளுக்கு உயர் பெறுமதி சேர்க்கப்படுவதனை உறுதிப்படுத்தும் பொருட்டு குளிரூட்டி வசதிகளை விருத்தி செய்தல், நவீன இலத்திரனியல் உபகரணங்களை கொண்டு கடற்றொழிலை பலப்படுத்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு, யப்பான் அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் யப்பான் யென்களைக் கொண்ட (அண்ணளவாக 435 மில்லியன் ரூபா) கொடையொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த கொடையின் கீழ் கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் திணைக்களம் சார்பில் ஐஸ் கட்டி உற்பத்தி இயந்திரங்கள், இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு டிஜிட்டல் தராசுகள், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு மீன்பிடி வலைகள், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு முன்னரே தயாரிக்கப்பட்ட குளிர்சாதன பெட்டி / உறை குளிர்சாதன பெட்டி மற்றும் உறை குளிர்சாதன பெட்டியுடனான டிரக் வண்டிகள் என்பன பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க இந்த கொடையினை பெற்றுக் கொள்வதற்கும் அதற்குரிய உடன்படிக்கைகளை செய்துகொள்வதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.