• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமகால தேவைகளுக்கு ஏற்றவாறு 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (தொழில் மற்றும் ஊதியம் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்துதல்
- தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், அறிவியல் செயற்பாடுகளை வௌிவாரியாக பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள், வர்த்தக செயற்பாடுகளை வௌிவாரியாக பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள் என்பன சார்பில் கணக்கு, நிர்வாக மற்றும் தொழிநுட்ப பணிகளில் ஈடுபடும் அலுவலகங்களில் சேவை புரியும் பெண்களுக்கு இரவு சேவையில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (தொழில் மற்றும் ஊதியம் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்துவதற்கு 2023‑08‑08 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (தொழில் மற்றும் ஊதியம் ஒழுங்குபடுத்தல்) (திருத்த) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, உரிய சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், அங்கீகாரத்தின் பொருட்டு பாரளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.