• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2005 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபை சட்டத்தை திருத்துதல்
- இலங்கை போக்குவரத்து சபைக்கு கிடைக்கவேண்டிய வருமானத்தை இல்லாதொழித்து பயணிகள் உட்பட பிற தரப்பினர்களினால் மேற்கொள்ளும் குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமான சட்ட ஏற்பாடுகளை செய்து கொள்ளும் தேவை மற்றும் 2005 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், பயணிகள் போக்குவரத்து சேவையில் நிகழ்ந்துள்ள புதிய மீள் ஏற்பாடுகள் மற்றும் போக்குகள் என்பவற்றை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சட்டத்திலுள்ள சில ஏற்பாடுகளை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2005 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கை போக்குவரத்து சபை சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்,டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.