• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன சட்டத்தை திருத்துதல்
- e-Motoring கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு 2023‑06‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான இடைக்கால ஏற்பாடுகளை செய்வதற்கும் இடைநேர் விளைவான பணிகள் சார்பிலும் மோட்டார் வாகன சட்டத்தை பொருத்தமானவாறு திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்த நோக்கம் கருதி சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்,டு பதில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.