• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுயாதீன பாராளுமன்ற தர நியமங்கள் அதிகாரசபையினை தாபித்தல்
- பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புக்கூறல், நம்பகத்தன்மை, தௌிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துதல், சட்டவாக்க மன்றத்தின் செயற்திறன், வௌிப்படைத்தன்மை மற்றும் நடு நிலமை தொடர்பில் மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வது என்பன அத்தியாவசிய காரணிகளாகும். ஆதலால் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் தமது அதிகாரங்கள், சிறப்புரிமைகள், பணிகள் மற்றும் கடமைகள் என்பவற்றை நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் நிறைவேற்றுதல் வேண்டும். உலகின் பெரும்பாலான நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்க நெறியினை நடைமுறைப்படுத்துவதற்கும் அவற்றை மேற்பார்வை செய்வதற்குமான பொறிமுறையொன்று உள்ளமை பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் ஒழுக்கநெறி கோவையான்றை தயாரிப்பதற்கும் இது தொடர்பில் விசாரணை செய்வதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க இந்த நோக்கம் கருதி தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப வரைவு தொடர்பில் பாராளுமன்றத்தின் மாண்புமிகு சபாநாயகரினதும் கட்சி தலைவர்கள் அனைவரினதும் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கும் அதன் பின்னர் இந்த கருத்துக்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.