• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச மத்திய நிலையத்திற்கும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
- புலம்பெயர்பவர்கள், மீண்டும் நாட்டிற்கு வருகைதரும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலம்பெயர எதிர்பார்ப்பவர்கள் ஆகியோர்கள் வௌிநாடுகளில் சுற்றுலாக்களை மேற்கொள்ளும் போது, தொழிலில் ஈடுபடும் போது, வசிக்கும் போது முகங்கொடுக்க நேரிடும் ஆபத்துக்கள் மற்றும் சவால்களை குறைப்பதற்கு புரிந்துணர்வுடன் தீர்மானங்களை எடுப்பதற்கு ஆற்றலை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு போதுமான, காலத்திற்கேற்ப மற்றும் நம்பகத்தன்மையான தகவல்கள் உட்பட வழிகாட்டல்களை வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் புலம்பெயர் வள நிலையமொன்றை தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு ஒத்துழைப்பு நல்குவதற்கு நியுசிலாந்து அரசாங்கம் அதன் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, நியுசிலாந்தின் வர்த்தகம், புத்தாக்கம் மற்றும் தொழில் அமைச்சின் ஊடாக புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச மத்திய நிலையத்தினூடாக உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 350,000 நியுசிலாந்து டொலர்களை வழங்குவதற்கு அந் நாட்டு அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. உத்தேச நிலையத்தை தாபிக்கும் பொருட்டு நியுசிலாந்தின் புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச மத்திய நிலையத்திற்கும் இந் நாட்டின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.