• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் தேசிய சுவடிகள் கூடத்திற்கும் நெதர்லாந்தின் தேசிய சுவடிகள் கூடத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- ஆசிய வரலாறு மற்றும் உலக வரலாறு ஆகிய இரு துறைகளினதும் கற்கை முக்கியமானதென அங்கீகரித்து யுனெஸ்கோ நிறுவனத்தினால் உலக நினைவுச் சின்னங்கள் பற்றிய ஆவணத்தில் சேர்த்துள்ள Dutch East India கம்பனியினால் நிர்மாணிக்கப்பட்ட அண்ணளவாக 7,500 தொகுதிகளைக் கொண்ட ஆவணங்கள் சுமார் 310 மீற்றர் நீளமானவை இலங்கை தேசிய சுவடிகள் கூடத்தின் கட்டுக்காப்பின் கீழுள்ளன. 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் தேசிய சுவடிகள் கூடத்திற்கும் நெதர்லாந்தின் தேசிய சுவடிகள் கூடத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட 4 கூட்டு உடன்படிக்கைகளின் கீழ் 5,066 தொகுதிகளைக் கொண்ட நுண்படங்களின் 1,701 பிரதிகள் நெதர்லாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, அவற்றிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட நுண்பட பிரதிகள் இலங்கையின் தேசிய சுவடிகள் கூடத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு 2024 ஆம் ஆண்டிலிருந்து 2028 ஆம் ஆண்டு வரை 05 வருட காலப்பகுதி சார்பில் இரு தரப்பிற்கும் இடையில் ஆவணங்கள் தொடர்பிலான ஒத்துழைப்பின் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கையின் தேசிய சுவடிகள் கூடத்திற்கும் நெதர்லாந்தின் தேசிய சுவடிகள் கூடத்திற்கும் இடையில் உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.