• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கல்வி அமைச்சுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் Peace Corps நிறுவனத்திற்கும் இடையில் தற்போதுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடித்தல்
- ஐக்கிய அமெரிக்க குடியரசு காங்கிரசின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும் Peace Corps நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள் 1962 - 1964, 1983 - 1998, 2004 - 2006 காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சுக்கும் Peace Corps நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 05 வருட காலப்பகுதி சார்பில் தன்னார்வ சேவைகளை வழங்குவதன் மூலம் இந்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வியினை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடொன்று எய்தப்பட்டது. ஆயினும், உயிரத்த ஞாயிறு தாக்குதல் மற்றும் COVID தொற்று நிலைமை காரணமாக திட்டமிடப்பட்டவாறு எதிர்பார்த்த காலப்பகுதியினுள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு Peace Corps நிறுவனத்திற்கும் இயலாமற் போனது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மீண்டும் நாட்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு Peace Corps நிறுவனமானது ஏற்கனவே உடன்பாடு தெரிவித்துள்ளமையினால் இதன் பொருட்டு இரு தரப்புக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையை 2023 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் மேலும் 05 வருட காலப்பகுதிக்கு நீடிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.