• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை அவுஸ்திரேலியா வர்த்தக மற்றும் மூதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கை காலத்தை நீடித்தல்
- அவுஸ்திரேலியா இலங்கையின் முக்கியமான நேரடி வௌிநாட்டு முதலீட்டு தரப்பினராக இருப்பதுடன், சுற்றுலா பயணிகளின் வருகையில் 5 ஆவது ஆதாரமாக அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் மூதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதனை எதிர்கால நோக்காகக் கொண்டு 2017‑11‑02 இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் வர்த்தக மற்றும் மூதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அவ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பினை தொடர்ந்து பேணுவதற்கு இயலுமாகும் வகையில் 2023‑10‑10 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 05 வருடங்களுக்கு அவ் உடன்படிக்கையை நீடிக்கும் பொருட்டு வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.