• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்கும் மக்கள் சீன குடியரசின் தேசிய அபிவிருத்தி, மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
- மக்கள் சீன குடியரசின் தேசிய அபிவிருத்தி, மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கும் இலங்கையின் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்கும் இடையில் உற்பத்தி ஆற்றல் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு இருதரப்பும் உடன்பட்டுள்ளது. அதற்கிணங்க குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.