• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுண்நிதிய மற்றும் கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தை அமுல்படுத்தல்
- 2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நுண்நிதிய சட்டத்தை இரத்து செய்து, நுண்நிதிய மற்றும் கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபை சட்டத்தை அமுல்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கு 2023‑03‑23 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.