• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய காணி ஆணைக்குழு சட்டத்தை தயாரித்தல்
- பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஒன்பதாவது அட்டவணையின் 1 பட்டியலின் பின்னிணைப்பு II இன் பிரகாரம் காணி ஆணைக்குழுவொன்றை தாபிக்க வேண்டுமென ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் , குறித்த விடயம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப வரைபினை அடிப்படையாகக் கொண்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.