• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க விமான பயண வழிசெலுத்தல் கட்டண ஒழுங்குவிதி
- கொழும்பு விமான போக்குவரத்து / பயணி தகவல் பிராந்தியத்தின் ஊடாக பயணிக்கும் விமானங்களுக்கு விமான பயண வழிசெலுத்தல் கட்டணமொன்றை விதிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1981 ஆம் ஆண்டில் விமான பயண வழிசெலுத்தல் கட்டண ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகள் கடந்த காலப்பகுதியில் திருத்தம் செய்யப்படவில்லை. அதனால் சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் கொள்கைகள் மற்றும் சமகால உலகளாவிய போக்கு என்பவற்றை கருத்திற்கொண்டு, விமான பயண வழிசெலுத்தல் கட்டண ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, குறித்த ஒழுங்குவிதி 2023 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க விமான பயண வழிசெலுத்தல் கட்டண ஒழுங்குவிதிகளாக 2023‑02‑16 ஆம் திகதியிடப்பட்டதும் 2319/64 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.