• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாரஹேன்பிட்ட ஹத்போதியவத்த என்னும் காணியிலுள்ள குறைந்த வசதிகளையுடைய குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்கள் சார்பில் நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் வீடுகளை வழங்கி குறித்த இடத்தினை அபிவிருத்தி செய்தல்
- நாரஹேன்பிட்ட கிருல கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள ஹத்போதியவத்த எனும் ஏக்கர் 01 றூட் 03 பேர்ச்சர்ஸ் 10 விஸ்தீரணமுடைய அரசுக்கு சொந்தமான காணித்துண்டில் குறைந்த வருமானம் கொண்டவர்களின் குடியிருப்பு காணப்படுவதுடன் மழைக்காலத்தில் குறித்த வீடுகள் அடிக்கடி அனர்த்தத்திற்கு உள்ளாகின்றன. அக் குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்கள் சார்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டங்களில் மாற்று வீடுகளை வழங்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த காணியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடமைப்பு திட்டங்களில் வீடுகளை வழங்குவதற்கும் அதன் பின்னர், குறித்த காணியில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு அரச காணி கட்டளைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிப்பதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.