• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அங்கொட, மண்டாவில, லேக் கிரெஸ்ட் ரெஸிடன்சீஸ் வீடமைப்பு கருத்திட்டத்தின் வீட்டு அலகுகளை இறையிலி அடிப்படையில் விற்பனை செய்தல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 500 வீட்டு அலகுகளைக் கொண்ட அங்கொட, மண்டாவில, லேக் கிரெஸ்ட் ரெஸிடன்சீஸ் வீடமைப்பு கருத்திட்டத்தின் வீடுகளின் உடைமையை 2018 ஆம் ஆண்டில் வீடு பெறுநர்களுக்கு கையளிக்கப்பட்டது. குறித்த வீடுகளுக்குரிய சகல கொடுப்பனவுகளும் செலுத்திய வீடு பெறுநர்களுக்கு கூட்டு ஆதன உரிமை சட்ட ரீதியில் இறையிலி உறுதிப்பத்திரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கும் ஏனைய வீடு பெறுநர்களினால் உரிய கொடுப்பனவுகள் முழுமையாக செலுத்தியதன் பின்னர், உறுதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.