• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் பாட நெறிகளை இலங்கையில் ஏற்றுக் கொள்ளல்
- சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் மருத்துவ பட்டப் பாட நெறிகளை இலங்கையில் ஏற்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படவேண்டிய தரநியமங்களையும் தகவுதிறன்களையும் உள்ளடக்கி தேசிய கொள்கையொன்றை வரையும் பொருட்டும் சமகால தேவைகளுக்கு ஏற்றவாறு மருத்துவ கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை திருத்தும் பொருட்டும் பொருத்தமான சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்கு பிரதம அமைச்சரின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் குழுவொன்றை நியமிப்பதன் பொருட்டு 2023‑05‑02 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகள் உள்ளடங்கிய அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, சர்வதேச தரப்படுத்தலுக்கமைய 01 தொடக்கம் 1000 வரையிலான வௌிநாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் மருத்துவ பட்டமானது இந் நாட்டின் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதன் சார்பில் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் சுகாதார அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.