• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பவித்திரா வன்னிஆரச்சி நட்பு மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
- பவித்திரா வன்னிஆரச்சி நட்பு மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையொன்றாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லலித் எல்லாவல அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப சட்டமூலம் சட்டமா அதிபரினால் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. பாராளுமன்ற நிலையியற் கட்டளை 52(6) ஆம் ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த சட்டமூலத்தை சிபாரிசு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.