• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிர்மாணித்தல், உரிமையினை வகித்தல் மற்றும் செயற்படுத்துதல் என்னும் அடிப்படையில் 1-5 MW திறனில் 70 MW திறன் வரையிலான சூரியசக்தி Photovoltaic மின் உற்பத்தி நிலையமொன்றைத் தாபித்தல்
- தேசிய மின்சார முறைமையுடன் இணைக்கப்பட்ட உற்பத்தி வலுசக்தி அலகு 70 MW திறனில் தரையில் பொருத்தப்பட்ட சூரியசக்தி Photovoltaic மின் உற்பத்தி நிலையங்களை தேசிய மின்சார முறைமையுடன் இணைக்கப்பட்ட உற்பத்தி வலுசக்தி அலகு (1-5) MW திறனில் நிர்மாணித்தல், உரிமையினை வகித்தல் மற்றும் செயற்படுத்துதல் என்னும் அடிப்படையில் 20 ஆண்டு செயற்பாட்டு காலத்துடன் 11 நெய்யறி துணை நிலையங்களுடன் இணைப்பதற்கு இயலுமாகும் வகையில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவினால் உரிய பிரேரிப்புகளை மதிப்பிட்டதன் பின்னர், முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு, அம்பாறை, அநுராதபுரம், காலி, ஹபரனை, குருநாகல், மாதம்பை, மாகோ மற்றும் மாத்தறை ஆகிய 08 நெய்யறி துணை நிலையங்களுக்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உரிய முதலீட்டாளர்களுக்கு அங்கீகாரத்தினை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.