• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல்
- மேல் மாகாணத்தில் குறைந்த வசதிகளுடன்கூடிய குடியிருப்புகளில் வசிப்பவர்களை இடம் நகர்த்தி வசதிகளுடன்கூடிய நகர வீடமைப்பு திட்டங்களிலுள்ள வீடுகளில் குடியமர்த்துவதற்கு எடுக்கப்ட்ட தீர்மானத்தின் பிரகாரம் நடைமுறையிலுள்ள நகர புத்துயிரளிப்பு கருத்திட்டத்திற்கு உதவியாக 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு 552 மில்லியன் யுவான்கள் கொண்ட நிதி உதவியினை வழங்குவதற்கு சீன அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கருத்திட்டத்தின் கீழ் காணி அபிவிருத்தி மற்றும் வேலைப் பகுதி எல்லை வரை தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் என்பன இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும். அதற்கிணங்க, சீன அரசாங்கத்துடன் உரிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.