• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய வணிக மேல் நீதிமன்றமொன்றினைத் தாபித்தல்
- அபிவிருத்தி குறியிலக்குகளை அடையும் போது நாட்டில் மிக சிறந்த முதலீட்டு சூழ்நிலையினை பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வணிக விடயங்கள் சம்பந்தமாக தற்போது நிலவும் அதிகளவான வழக்குகளை துரிதமாக தீர்த்து முற்றாக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு புதிய வணிக மேல் நீதிமன்றமொன்றினைத் தாபிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க உரிய வணிக மேல் நீதிமன்றத்தை கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, இலக்கம் 80 என்னும் இடத்தில் தாபிக்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.