• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை இடுவதன் மூலம் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரித்தல்
- நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் நீர் வாழ் உயிரின வளர்ப்புத் துறை இலங்கையின் கிராமிய பொருளாதாரத்தில் முக்கிய பங்கிளை நிறைவேற்றுகின்றதோடு, உணவுப் பாதுகாப்பு, போசாக்கினை அதிகரித்தல் மற்றும் தொழில் / வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்துதல் என்பன பொருட்டு உயர் பங்களிப்பினை வழங்குகின்றது. நாட்டிலுள்ள நீர்தேக்கங்களில் உயர் வளர்ச்சியுடன்கூடிய பொருளாதார ரீதியில் பயனுள்ள நன்னீர் மீன் உற்பத்தியினை மேற்கொள்வதற்காக வருடாந்தம் சுமார் 500 மில்லியன் மீன் குஞ்சுகளை தொடர்ந்து இடவேண்டியுள்ளது. ஆயினும் மீன் குஞ்சுகள் போதுமானளவு இடப்படாமையினால் மீன் வளர்ப்பினை அடிப்படையாகக் கொண்ட கடற்றொழில் சார்பில் நீர்தேக்கங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு இதுவரை முடியாமற் போயுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 230 மில்லியன் மீன் குஞ்சுகளும் 80 மில்லியன் இறால் குஞ்சுகளும் நீர்தேக்கங்களில் இடுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அண்மைக்காலத்தில் நிலவிய வறட்சியான கால நிலைமையின் மத்தியில் நீர்தேக்கங்கள் வற்றியதன் காரணமாக குறித்த திட்டத்தை மாற்ற நேரிட்டது. அதற்கிணங்க குறித்த திட்டத்தை மாற்றியமைத்து இந்த ஆண்டின் மீதி காலப்பகுதியில் 100 மில்லியன் மீன் குஞ்சுகளையும் 50 மில்லியன் இறால் குஞ்சுகளையும் உற்பத்தி செய்து நீர்தேக்கங்களில் இடும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 2023 ஆம் ஆண்டில் இந்த நோக்கம் கருதி 100 மில்லியன் ரூபாவைக் கொண்ட மேலதிக நிதி ஏற்பாட்டினை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.