• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Tess (Pvt.) Limited கம்பனிக்கு மீன் பதனிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான வசதிகளை ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தில் வழங்குதல்
- ஒலுவில் கடற்றொழில் துறைமுக மனையிடத்தில் பயன்படுத்தாதுள்ள மீன் பதனிடல் இயந்திரத்தை மீண்டும் இயக்கி மீன் பதனிடல் செயற்பாடுகளை பேணும் பொருட்டு Tess (Pvt.) Limited கம்பனிக்கு ஒலுவில் கடற்றொழில் துறைமுகத்தில் வசதிகளை வழங்குவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள உரிய குத்தகை கூலியை மாதாந்தம் அறவிடுவதன் கீழ் ஒலுவில் துறைமுக கட்டிட தொகுதியல் அமைந்துள்ள மீன் பதனிடல் பிரிவை Tess (Pvt.) Limited கம்பனிக்கு 10 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.