• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்குக் கிடைக்கும் நுகர்வோரின் முறைப்பாடுகளுக்குரியதாக நடாத்தப்படும் விசாரணைகளை முறைப்படுத்துதல்
- 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் முறைபாடுகள் சம்பந்தமாக தலையிடுவதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவைக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள அளவைக் கூறுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையுடன் இணைந்து சந்தையில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கிணங்க, நுகர்வோரின் முறைபாடுகளை விசாரணை செய்து அதன் தீர்மானங்களை வழங்க எடுக்கும் காலம் மற்றும் உழைப்பு என்பவற்றை குறைக்கும் முக்கிய நடவடிக்கையொன்றாக நுகர்வோர்களின் உரிமையினை பாதுகாத்தல் மற்றும் நியாயமான வர்த்தக நடவடிக்கைகள் சம்பந்தமாக நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் அறியச் செய்வித்தல், குறித்த முறைப்பாடுகள் சம்பந்தமாக விசாரணை நடாத்தும் வழிமுறையினை வினைத்திறன்மிக்கதாக்கும் பொருட்டு குறித்த பணிகளை பன்முகப்படுத்தி மாவட்ட மட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தல், விசேட சுற்றிவளைப்பு தொடர்பிலான பணிகளை கூட்டு வேலைத்திட்டமொன்றின் மூலம் மேற்கொள்ளும் நோக்கில் தேசிய செயற்பாட்டு நிலையமொன்றைத் தாபித்தல் போன்றவற்றிற்குரியதாக தனது அமைச்சினால் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ள வேலைத்திட்டமானது வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதுடன் அதன் பொருட்டு அமைச்சரவையின் உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.