• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
100 மெகாவொட் சூரிய வலுசக்தி கருத்திட்டத்திற்காக அரசாங்க காணியினை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- 100 மெகாவொட் சூரிய வலுசக்தி கருத்திட்டத்திற்காக மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சுமார் 219.72 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணியினை இலங்கை நிலைபேறுடைய வலுசக்தி அதிகாரசபைக்கு உடமையாக்குவதற்கான பிரேரிப்பு 2023‑08‑07 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுடன் கலந்துரையாடி அது தொடர்பிலான தகவல்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் சிபாரிசின் மீது உரிய காணியினை தெரிவுசெய்யும் மீள் புதுப்பித்தக்க வலுசக்தி அபிவிருத்தியாளருக்கு துணைக் குத்தகைக்களிப்பதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி இலங்கை நிலைபேறுடைய வலுசக்தி அதிகாரசபைக்கு 25 வருட காலம் கொண்ட நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.