• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பாதுகாப்புக்கு தாக்கத்தைச் செலுத்தும் இரசாயன பொருட்களை ஒழுங்குறுத்துதல்
- கைத்தொழில், கமத்தொழில், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி போன்ற அமைதியான செயற்பாடுகளுக்கு பல்வேறு இரசாயனப் பொருட்கள் பெருமளவில் இந்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் நைற்றிக் அமிலம், குளோரீன், ​​​ஐதரசன் , பெரொக்சைட், பொட்டாசியம் சயனைட், சோடியம் சயனைட், நைற்றோமெதேன் மற்றும் சோடியம் ஏசைட் போன்ற இரசாயனப் பொருட்கள் அமைதியான பயன்பாட்டிற்கும் அதே போன்று சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக் கூடிய இரட்டைப் பயன்பாடுடையவையென அவதானிக்கப்பட்டுள்ளது. பால்,பானங்கள், எண்ணெய் சார்ந்த கைத்தொழில்கள், நீர் சுத்திகரிப்பு போன்ற பல்வேறு கைத்தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் இந்த இரசாயனப் பொருட்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஆபத்தினை விளைவிக்கக் கூடிய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் ஆபத்து நிலவுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், அவ்வாறான இரசாயனப் பொருட்களின் முறைக்கேடான பயன்பாட்டினை தடுப்பதற்கு அவற்றை ஒழுங்குறுத்துவதற்காக சட்ட ரீதியிலான ஏற்பாடுகளை விதிப்பதற்கும், குறித்த ஒழுங்குறுத்தும் பொறுப்பை இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்'படுத்துவதற்கான தேசிய அதிகாரசபைக்கு கையளிப்பதற்குமாக பாதுகாப்பு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.