• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றைத் தாபித்தல்
- 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிறுவன மறுசீரமைப்பின் பொருட்டு சுயதீனமான அரசாங்க கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றைத் தாபிக்கும் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வௌிப்படைத் தன்மை என்பன சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதிகளின் கீழ் முன்னுரிமை துறைகளாக இனங்காணப்பட்டுள்ளன. உத்தேச அரசாங்க கடன் முகாமைத்துவ நிறுவனத்தினைத் தாபிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தினாலும் உலக வங்கியினாலும் தொழினுட்ப ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், கடன் முகாமைத்துவ மறுசீரமைப்புத் திட்டங்கள், கடன் முகாமைத்துவ நிறுவன ரீதியிலான கட்டமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பு என்பன ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கிணங்க, அரசாங்க கடன் முகாமைத்துவ சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பதில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.