• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தை திருத்துதல்
- சமூகத்திலுள்ள அங்கவீனமுற்ற பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமையினை வழங்கி அவர்களுக்கு பரந்துபட்ட பாதுகாப்பு கிடைப்பதனை உறுதி செய்யும் பொருட்டு சட்ட ரீதியான நிறுவனமொன்றாக தாபிக்கப்பட்டுள்ள அல்லது சமூக சேவை அமைப்புகளை பதிவு செய்வதற்காக நடைமுறையிலுள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் சுகாதார சேவைகள் / கல்வி முறைமைகளுடன் இணைந்து அத்தகைய பிள்ளைகளுக்கு சுகாதார வசதிகளை வழங்கும் அத்தகைய எந்தவொரு தொண்டு நிறுவனத்திற்கும் வரிச் சலுகையினை கோருவதற்கு இயலுமாகும் வகையில் உற்நாட்டு இறைவரியினை திருத்துவது பொருத்தமானதென முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி உள்நாட்டு இறைவரி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பதில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.