• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய அரபு எமீர் குடியரசின் துபாய் நகரத்தில் நடாத்தப்படும் காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் கட்டமைக்கப்பட்ட சமவாய தரப்பினர்களினது 28 ஆவது அமர்வு
- காலநிலை மாற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் கட்டமைக்கப்பட்ட சமவாய தரப்பினர்களினது 28 ஆவது அமர்வினை (COP 28) 2023‑11‑30 ஆம் திகதி தொடக்கம் 2023‑12‑12 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தின் துபாய் நகரத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறித்த சந்தர்ப்பத்தில் காலநிலை மாற்றத்தினால் ஆபத்துக்கு உள்ளாவதற்கான வாய்ப்பு கூடுதலாகவுள்ள நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் பொதுவான கோரிக்கையினை செய்வதற்கும் இதன் பொருட்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளின் உறுதிகூறல்களையும் பொறுப்பினையும் நிறைவேற்றுவதற்கு இந்த நாடுகளை ஈடுபட செய்யும் விதத்திலான சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் இயலுமாகும் வகையில் 'காலநிலை நியாய மன்றம்' (Climate Justice Forum) என்னும் பெயரில் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான பிரேரிப்பினை முன்வைப்பதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது. அதற்கிணங்க, ஐக்கிய நாடுகளின் கட்டமைக்கப்பட்ட சமவாய தரப்பினர்களினது 28 ஆவது அமர்வில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் குழுவின் முனைப்பான பங்களிப்புக்கு அரசாங்க மேடையொன்றை இந்த மாநாடு நடாத்தப்படும் காலப்பகுதியில் நடாத்திச் செல்வதற்கும் காலநிலை மாற்றத்திற்குரியதான தேசிய மட்டத்திலான முன்முயற்சிகளை இந்த மேடையின் ஊடாக காட்சிப்படுத்துவதற்கும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.