• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எதிர்வரும் நான்கு (04) மாத காலத்திற்கு டீசல் நான்கு (04) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்தல்
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 2023‑11‑01 ஆம் திகதி தொடக்கம் 2024‑02‑29 ஆம் திகதிவரையிலான எதிர்வரும் நான்கு (04) மாத காலத்திற்கு டீசல் நான்கு (04) கப்பல் தொகைகளை கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்த முறையின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளது. இதன் பொருட்டு ஐந்து (05) விலைமனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு உரிய பெறுகையினை M/s Petrochina International (Singapore) Pte. Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.