• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முத்துராஜவெலவிற்கு அண்மித்த கடலில் பெற்றோலிய பொருட்கள் இறக்கும் செயற்பாடின் பொருட்டு பயன்படுத்தப்படும் நங்கூரம் மிதவைகள் சார்பில் தேவைப்படும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்தல்
- முத்துராஜவெலவிற்கு அண்மித்த கடலில் பெற்றோலிய பொருட்கள் இறக்கும் செயற்பாடின் பொருட்டு பயன்படுத்தப்படும் நங்கூரம் மிதவைகள் சார்பில் தேவைப்படும் கடலில் மிதக்கும் 26 இறப்பர் குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச ரீதியில் போட்டி கேள்வி வழிமுறைக்கு அமைவாக விலைமனு கோரப்பட்டுள்ளதோடு இதன் பொருட்டு விலைமனு ஒன்று மாத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த விலைமனுவினை மதிப்பிட்ட தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவினாலும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய பெறுகையினை சிங்கப்பூரின் M/s Yokahama Industrial Products Asia Pacific (Pte.) Ltd. நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.