• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் ஜோர்ஜியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் Levan Mikeladze இராஜதந்திர பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- நிபுணத்துவ அறிவினை பரிமாறிக் கொள்ளல், கல்வி பதவியணியினரைப் பரிமாறிக் கொள்ளல், மாணவர்களை பரிமாறிக் கொள்ளல், ஒன்றிணைந்த ஆராய்ச்சி நிகழ்ச்சித்திட்டங்கள் உட்பட கற்பித்தல் வழிமுறைகள் மற்றும் ஏனைய உரிய துறைகள் சம்பந்தமாக ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் பெருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்திற்கும் ஜோர்ஜியாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் Levan Mikeladze இராஜதந்திர பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு நடாத்தப்படும் விழாவிற்கு ஒருங்கிணைவாக உத்தேச இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை இருதரப்புக்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.