• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் இறக்குமதி வரியின்றி மீள் செறிவூட்டக்கூடிய மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குதல்
- “தற்போதுள்ள முதலீட்டுச்சபை கம்பனிகளின் மீள் முதலீடுகளுக்கான முதலீட்டாளர்களை தக்கவைத்துக் கொள்ளல் மற்றும் விரிவாக்கல் வேலைத்திட்டம்" மற்றும் "முதலீட்டுச் சபையின் தகவல் தொழினுட்பம் / தகவல் தொழிநுட்பம் வலுவூட்டப்பட்ட சேவை கம்பனிகள் 100 வேலைத்திட்டம்" போன்ற வேலைத்திட்டங்களின் கீழ் முதலீடுகளைக் ஊக்குவிப்பதன் பொருட்டு பின்வரும் நியமங்களை பூர்த்தி செய்கின்ற கருத்திட்டங்களுக்கு, காப்புறுதி மற்றும் கப்பல் கட்டணத்துடன் கூடிய 30,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை விஞ்சாத வகையில் மீள் செறிவூட்டக்கூடிய புதிய மின்சாரத்தில் இயங்கும் வாகனமொன்றை சுங்கக்கட்டண விலக்களிப்பின் கீழ் இறக்குமதி செய்வதற்கு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

I. தற்போதுள்ள முதலீட்டுச்சபை கம்பனிகளின் மீள் முதலீடுகளுக்கான முதலீட்டாளர்களை தக்கவைத்துக் கொள்ளல் மற்றும் விரிவாக்கல் வேலைத்திட்டம் :
* குறித்த நிறுவனம் இலங்கை முதலீட்டுச்சபைச் சட்டத்தின் 17 ஆவது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு 05 வருடங்களுக்குக் குறையாத காலத்திற்கு இயங்குதல்.
* முன்மொழியப்பட்ட வர்த்தக விரிவுபடுத்தல் வேலைத்திட்டத்தின் முதலீடு குறைந்தபட்சம் 3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருத்தல்.
* முன்மொழியப்பட்ட வர்த்தக விரிவுபடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் ஆகக்குறைந்தது 50 தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.

II. முதலீட்டுச் சபையின் தகவல் தொழினுட்பம் / தகவல் தொழினுட்பம் வலுவூட்டப்பட்ட சேவை கம்பனிகள் 100 வேலைத்திட்டம்:
* குறித்த வர்த்தகத்தினால் 50 புதிய உள்ளூர் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டியதுடன், அவற்றில் 15 ஊழியர்கள் தொழில்நுட்பத் தகைமைகளைப் பெற்றிருத்தல்.
* குறைந்தபட்ச முதலீடு 250,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக இருத்தல்.