• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்சார வாகனங்கள் பொருத்துவதனை ஊக்குவித்தல்
- பல ஆசிய நாடுகளினால் மின்சார வாகனங்கள் மற்றும் Plug-in Hybrid மின்சார வாகனங்களை பொருத்துதல் மற்றும் தயாரித்தல் என்பன பொருட்டு பூச்சிய (0%) இறக்குமதி வரி வீதத்தை விதிப்பதன் மூலம் மிகவும் சாதகமான அணுகுமுறையானது கடைப்பிடிக்கப்படுகின்றது. இவ்வாறான கவர்ச்சிகரமான ஊக்குவிப்புகளின் மூலம் முதலீட்டாளர்களையும் உற்பத்தியாளர்களையும் கவரக்கூடியதும் எதிர்கால ஏற்றுமதி திறன் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உலகளாவிய அளவுகோல்களுக்கு இணங்க செயலாற்றவும் இயலும். அதற்கிணங்க, உள்நாட்டில் மின்சார வாகன தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை முதலீட்டுச் சபையுடன் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அல்லது புதிதாக ஒப்பந்தம் செய்கின்ற கம்பனிகளினால் மின்சார வாகனங்கள் மற்றும் Plug-in Hybrid மின்சார வாகனங்களை பொருத்துதல் தொழிற்துறையில் குறைந்தபட்சம் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு 500kW தரப்படுத்தலுடன்கூடிய மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார துவிசக்கர வண்டிகள் மற்றும் 3000cc வரையிலான இயந்திர கொள்ளளவு கொண்ட Plug-in Hybrid மின்சார வாகனங்களை பொருத்துவதற்காக நவீன பகுதியளவிளான (Semi-Knocked-Down/SKD) தொகுதியை இறக்குமதி செய்யும் போது CIF பெறுமதி மீது பூச்சிய (0%) இறக்குமதி கட்டணத்தை விதிப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.