• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டமூலத்திற்கு குழுநிலை சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள்
- இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி முறையை (SVAT) 2024‑01‑01 ஆம் திகதி தொடக்கம் இரத்துச் செய்தல் உள்ளிட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டத்தை திருத்துவதற்காக சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பெறுமதிசேர்க்கப்பட்ட வரியை மீளச் செலுத்தக்கூடிய வலுவான முறையொன்று இல்லாமையினால் இலகுப்படுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி முறையை இரத்துச் செய்தால் தற்போது இந்த முறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு விசேடமாக ஏற்றுமதியாளர்களுக்கு பாரதூரமான பணப்பாய்ச்சல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென உரிய தரப்பினர்களினால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க, வலுவான வரியினை மீளச் செலுத்தும் முறையொன்றை உருவாக்கும் வரை இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர்க்கப்பட்ட வரி சட்டத்தை இரத்துச் செய்தலை கட்டம் கட்டமாக மேற்கொள்வது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. அதற்கிணங்க, பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற குழுநிலை விவாத சந்தர்ப்பத்தின் போது பெறுமதிசேர்க்கப்பட்ட வரி முறையை இரத்துச் செய்தல் தொடர்பான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் திகதியை 2025‑04‑01 என திருத்துவதன் பொருட்டு பிரேரணையொன்றை முன்வைப்பதற்காக நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.