• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாலின சமத்துவம் தொடர்பிலான சட்டமூலம்
- இலங்கையில் பாலின சமத்துவம் தொடர்பில் குறிப்பிடத்தக்க பின்னடைவு காணப்படுவதுடன் பாலின சமத்துவமின்மையை குறைப்பதற்காக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கிணங்க, பாலின சமத்துவத்தையும் மகளிரை வலுப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2022‑09‑05 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலம் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பொருட்டு அமைச்சரவையினால் கொள்கை ரீதியிலான உடன்பாட்டினைத் தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.