• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வௌியிடப்பட்டுள்ள கட்டளையை பாராளுமன்ற அங்கீகாரத்தின் பொருட்டு சமர்ப்பித்தல்
- நடைமுறையிலுள்ள இறக்குமதி வரி கட்டமைப்பிற்கு அமைவாக முடிவுப் பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் அச்சிடும் மைகளைவிட உள்நாட்டு உற்பத்தியாளர்களினால் உற்பத்தி செய்யப்படும் அச்சிடும் மைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒருசில மூலப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதிக வரி வகைப்படுத்தலுக்கு உட்படுவதால், அவற்றின் உற்பத்தியாளர்கள் பாதகமான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இந் நிலைமையை சீர் செய்வதற்காக 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக 2023‑07‑21 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.