• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எதிர்வரும் நான்கு (04) மாத காலத்தினுள் பெற்றோல் 92 Unl கப்பல் தொகை நான்கினை (04) கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம்
- 2023‑09‑21 ஆம் திகதி தொடக்கம் 2024‑01‑21 ஆம் திகதி வரையிலான நான்கு (04) மாத காலப்பகுதிக்கு ஒக்டேன் 92 Unl வகை பெற்றோல் கப்பல் தொகை நான்கினை (04) கொள்வனவு செய்வதன் பொருட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்துள்ள விநியோகத்தர்களிட மிருந்து நீண்டகால ஒப்பந்தம் சார்பில் விலைமனு கோரப்பட்டுள்ளது. அதற்கமைவாக 04 கம்பனிகள் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளன.. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய பெறுகையினை சிங்கப்பூரின் M/s Vitol Asia Pte. Ltd, கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.