• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய சக்தி / மின்கலங்கள் களஞ்சியப்படுத்தல் கருத்திட்டத்திற்கான முதலீட்டு பிரேரிப்பு
- நாட்டினுள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் 50 மெகாவொட் அல்லது அதற்கு மேற்பட்ட கொள்ளளவுடைய மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தி கருத்திட்டமொன்றை அபிவிருத்தி செய்து கொள்வதற்காக உத்தேச முதலீட்டாளர்களின் அபிப்பிராய வௌி​ப்படுத்தல்களை கோருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 134 மெகாவோட் மின்சக்தியை வழங்குவதற்கு இயலுமான வகையில் கிளிநொச்சி பூநகரி குளத்தில் மின்கலங்கள் களஞ்சியப்படுத்தல் தொகுதியுடன் கூடிய மெகாவொட் 700 சூரிய சக்தி மின் நிலையமொன்றை அபிவிருத்தி செய்வதன் பொருட்டிலான பிரேரிப்பொன்று United Solar Energy S L (PVT) Ltd கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1,727 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மொத்த முதலீட்டுடன் கூடிய 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடாக உத்தேச இந்தக் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்நாட்டு கருத்திட்ட ஆக்கக்கூறுக்காக பயன்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக 13.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட செலவின் கீழ் கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக பூநகரி குளத்தைச் சுற்றி 03 அணைக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டு, குறித்த இந்த குளத்தை புனரமைப்பதற்கும் இக்கருத்திட்ட கம்பனி முன்மொழிந்துள்ளது. இதற்குப் பதிலாக அக்குளத்தின் ஆழமற்ற பிரதேசத்தின் 1,080 ஏக்கரில் 700 மெகாவொட் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 35 வருடகால குத்தகை அடிப்படையில் உரிய கம்பனிக்கு வழங்குவதற்கு தற்போது வட மாகாண சபையும் வட மாகாண நீர்ப்பாசன திணைக்களமும் கமநல அபிவிருத்தி திணைக்களமும் உடன்பாட்டைத் தெரிவித்துள்ளன. அதன் பொருட்டு United Solar Energy S L (PVT) Ltd கம்பனியினால் சமர்ப்பிக்கபட்ட கருத்திட்ட பிரேரிப்பினை கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்வதற்கும் குறித்த பிரேரிப்பினை மதிப்பிட்டு சிபாரிசுகளை முன்வைக்கும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.