• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடி வீட்டு தொகுதி அமைந்துள்ள காணியின் ஒரு பகுதியினை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்குதல்
- நாரஹேன்பிட்ட, காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள 144 வீட்டு அலகுகளைக் கொண்ட மாடி வீட்டுத் தொகுதியுடனான சுமார் 0.2761 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணித்துண்டை கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வழங்குதன் சார்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முமைத்துவ சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இம்மாடி வீட்டுத்தொகுதி அமைந்துள்ள காணித்துண்டை கொழும்பு பல்கலைக்கழக விடுதி வசதிகளுக்காக பயன்படுத்துவதன் பொருட்டு இறையிலி கொடையொன்றாக கையளிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கபட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.