• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேரே ஏரியின் நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்னோடிக் கருத்திட்டமொன்றைச் செயற்படுத்துதல்
- ஜப்பானுக்கு சொந்தமான சிங்கப்பூர் நிறுவனமான Groepo Pte Ltd (GPL) நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைய Micro nano bubble technology, Carbon fiber bio film technology மற்றும் eco-friendly enzymes பயன்படுத்தி பேரே ஏரியின் நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான முன்னோடிக் கருத்திட்டத்தினை அரச நிறுவனங்கள் பலவற்றுடன் இணைந்து செயற்படுத்துவதற்குத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பொருட்டு 2023‑07‑17 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியிலான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கிணங்க, கருத்திட்ட முதலீட்டாளரினால் முன்வைக்கப்பட்ட மேலதிகத் தகவல்களைக் கருத்திற் கொண்டு, இந்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள நீர் தரப்பண்பு தொடர்பிலான விசேட நிபுணர்கள், தொடர்புடைய அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களினதும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களினதும் பிரதிநிதிகள் உள்ளடங்கிய நிபுணர்கள் குழுவினால் இக்கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை செய்வதற்கு உட்பட்டு, முன்மொழியப்பட்ட இம்முன்னோடிக் கருத்திட்டத்தை 05 வருடகாலத்திற்கு நடைமுறைப்படுத்து வதற்கும், அதன் பின்னர், எய்தப்படும் பெறுபேற்றினை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்திட்டத்தை மேலும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினாலும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.