• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இணையவழி முறைகளின் பாதுகாப்பு பற்றிய சட்டமூலம்
- இணையத்தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பொய்யான கூற்றுக்களை வௌியிடுதல், செல்வாக்கு செலுத்தும் வகையில் தூண்டுதல்களை செய்தல் என்பன மூலம் நிகழும் பாதிப்புகளிலிருந்து சமூகத்தை பாதுகாப்பதை நோக்காக கொண்டு, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள இணையவழி முறைகளின் பாதுகாப்பு பற்றிய சட்டமூலம்இணையவழி முறைகளின் பாதுகாப்பு பற்றிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தின் III ஆம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பின்வரும் நடவடிக்கைகள் இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் மூலம் குற்றமாக பொருள் கோரப்பட்டுள்ளது;

* இலங்கையில் நிகழ்வு பற்றிய பொய்யான கூற்றுக்களின் தொடர்பாடல்.
* அவமதிப்புக்கு ஏதுவாய் அமையும் பொய்யான கூற்றுக்களை வௌியிடுதல்.
* கலகம் விளைவிப்பதற்கு பொய்யான கூற்று மூலம் தேவையின்றி ஆத்திரமூட்டல்.
* பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக் கூட்டமொன்றை குழப்புதல்.
* மத உணர்வுகளை புன்படுத்த வேண்டுமென்றே திட்டமான உளக் கருத்துடன் பொய்யான கூற்றொன்றை அறிவித்தல்.
* மத உணர்வுகளை நிந்திப்பதற்கு பொய்யான கூற்றுக்கள் பற்றிய திட்டமானதும் வன்மமானதுமான தொடர்பாடல்.
* ஏமாற்றுதல்.
* ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்.
* சமாதான கேட்டை ஏற்படுத்தும் உளக் கருத்துடன் பொய்யான கூற்று மூலம் வேண்டுமென்று நிந்தித்தல்.
* கலகம் அல்லது அரசுக்கெதிரான தவறொன்றை ஏற்படுத்தும் உளக் கருத்துடன் பொய்யான அறிக்கையை பரப்புதல்.
* தொல்லையை ஏற்படுத்துவதற்கான நிகழ்வு பற்றிய கூற்றுக்களை அறிவித்தல்.
* சிறுவர் துஷ்பிரயோகம்.
* தவறொன்றை புரிவதற்கு தன்னியக்க செய் நிரல்களை ஆக்குதல் அல்லது மாற்றுதல்.

அதற்கிணங்க, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.