• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தை நீக்குதலும் குடியிருப்போர் பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகம் செய்தலும்
- காணி உரிமையாளர்களினதும் வாடகை குடியிருப்பாளர்களினதும் உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தியுள்ள 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்திற்கு பல சந்தர்ப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இந்த சட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேறாமை தெரியவந்துள்ளது. நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள வீட்டு வாடகை சட்டம் தொடர்பிலான ஆலோசனை குழுவினால் இது தொடர்பில் விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதோடு, அதற்கிணங்க காணி உரிமையாளர்களினதும் வாடகை குடியிருப்பாளர்களினதும் உரிமைகளை சமமாக பாதுகாப்பதை நோக்காகக் கொண்டு புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தை நீக்குவதற்கும் குடியிருப்பாளர்களை பாதுகாக்கும் சட்டம் என்னும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் சட்டமூலமொன்றை தயாரிக்கும் பொருட்டு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.