• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்தினால் கொமரோஸ் ஒன்றியம் மற்றும் சாஓ டொம், பிரின்சிபோ சனநாயக குடியரசு ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை தாபித்தல்
- ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட 54 இறைமையுடைய நாடுகள் ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ளன. அவற்றுள் 46 நாடுகளுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதோடு, மேலும் 06 நாடுகளின் உடன்பாட்டினை எதிர்பார்த்துள்ளது. அதற்கிணங்க ஆபிரிக்க பிரியாந்தியத்தின் கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள தீவுகளைக் கொண்ட கொமரோஸ் ஒன்றியம் மற்றும் கினியா விரிகுடாவில் அமைந்துள்ள ஆபிரிக்க தீவொன்றான சாஓ டொம், பிரின்சிபோ சனநாயக குடியரசு ஆகியவற்றுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.