• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவில் முன்னேற்றம்
- வரிசை அமைச்சுக்களினால் செயற்படுத்தப்படும் 202 பாரிய அளவிலான அபிவிருத்தி கருத்திட்டங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவில் எய்தப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைச்சரவையினால் பரிசீலனை செய்யப்பட்டது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு செயற்பாடானது முடிவுறும் வரை வௌிநாட்டு நிதிகளின் மீது செயற்படுத்தப்படும் கருத்திட்டங்களுக்குரிய நிதிகளை பயன்படுத்தமுடியாமற் போதல் மற்றும் உள்நாட்டு நிதியினை விடுவித்தல் வரையறுக்கப்படுதல் போன்ற காரணங்களினால் 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவில் பெரும்பாலான கருத்திட்டங்களின் முன்னேற்றம் எதிர்பார்த்த மட்டத்தைவிட குறைந்த மட்டத்தில் நிலவுகின்றமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கிணங்க, கடன் மறுசீரமைப்பு செயற்பாடு முடிவடைந்ததன் பின்னர் வௌிநாட்டு நிதியினை பயன்படுத்தும் சாத்தியம் கிடைக்கும் வரை தற்போது நடைமுறையிலுள்ள கருத்திட்டங்களிலிருந்து அரசாங்கத்தின் 2048 அபிவிருத்தி குறியிலக்கை அடைவதற்கும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுக்கு பங்களிப்பு நல்கக்கூடியதுமான கருத்திட்டங்கள் சார்பில் முன்னுரிமை வழங்கி 2024 ஆம் ஆண்டில் வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.