• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர் முகாமைத்துவ தேவையினை அவசர நிலைமையாக கருதி கூட்டு அணுகுமுறையின் ஊடாக நடவடிக்கை எடுத்தல்
- கடந்த நாட்களில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக நாட்டில் 17 மாவட்டங்களுக்குரிய 70 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடியிருக்கும் சுமார் 84,000 குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதென தேசிய அனர்த்த நிவாரண நிலையத்தினால் 2023‑08‑22 ஆம் திகதியன்று வௌியிட்டுள்ள அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ் நாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் போதுமானளவு நீர் கொள்ளளவு சேரும் வரை தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட நீர் கொள்ளவை சிறந்த முறையில் பயன்படுத்தவும் முகாமிக்கவும் நேர்ந்துள்ளது. அமைச்சரவையினால் 2023‑07‑10 ஆம் திகதியன்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய நீர்வள கொள்கைக்கு அமைவாக குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்பதோடு, ஏனைய நீர் தரப்பினர்களை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் கட்டு'ப்பட்டுள்ளது. அதற்கிணங்க, போதுமான மழை வீழ்ச்சி கிடைக்கும் வரை குடிநீர் விநியோகத்தை அவசரமானதும் முதன்மை அத்தியாவசியமானதுமாக கருதி நடவடிக்கை எடுப்பதற்கும் அதன் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு தேசிய நீர் வள கொள்கையின் மூலம் பிரேரிக்கப்பட்டுள்ள தேசிய நீர் வள சபையை அவசர செயற்பாட்டு குழுவாக நடவடிக்கை எடுப்பதற்கும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் நீர்ப்பாசன அமைச்சரினாலும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.