• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines Ltd. சார்பில் தரைக் கையாள்கை சேவைகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
- SriLankan Airlines Ltd. சார்பில் இந்தியாவின் தில்லி மற்றும் திருச்சி சர்வதேச விமான நிலையங்களிலும் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்திலும் குவைத் சர்வதேச விமான நிலையத்திலும் தரைக் கையாள்கை சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வரையறுக்கப்பட்ட சர்வதேச வழிமுறையின் கீழ் கேள்வி கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய பெறுகைகளை முறையே பின்வரும் கேள்விதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* Celebi Airport Services India Pvt. Ltd.

* Bird Airport Services (Trichy) Pvt. Ltd.

* Beijing Aviation Ground Services Company Limited

* National Aviation Services W.L.L.