• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
SriLankan Airlines Ltd. சார்பில் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் என்பவற்றில் விமான எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தங்களை கையளித்தல்
- SriLankan Airlines Ltd. சார்பில் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் என்பவற்றில் விமான எரிபொருள் வழங்கும் பொருட்டு வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு மூன்று (03) விலை மனுக்கள் வீதம் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்குறைந்த அனுசரணையான விலையினை முன்வைத்துள்ள Shell Markets (Middle East) கம்பனிக்கு மேற்போந்த விமான நிலையங்களில் SriLankan Airlines Ltd. கம்பனிக்குச் சொந்தமான விமானங்கள் சார்பில் எரிபொருள் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளிப்பதற்கு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.