• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பயங்கரவாத தடைச் சட்டமூலம்
- நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத தடை சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டு 2023‑02‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட குறித்த சட்டமூலத்திலுள்ள சில பிரிவுகள் சம்பந்தமாக அக்கறையுள்ள தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, குறித்த சட்டமூலத்திற்குத் தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க ஏற்கனவே வரையப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் திருத்தங்களை உள்ளடக்கி பயங்கரவாத தடை சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.