• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1907 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 451) பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1907 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க வனப் பாதுகாப்பு சட்டத்தின் (அத்தியாயம் 451) கீழ் ஆக்கப்பட்டதும் 2023‑08‑21 ஆம் திகதியிடப்பட்டதும் 2346/02 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌிப்படுத்தப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க மரங்கள், காட்டு மர வகைகளின் விதை மற்றும் பிற காட்டு உற்பத்திகள் ஏற்றுமதி கட்டளையை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.